தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயகத்தில் நினைவுகொள்ளப்பட்ட காலங்களில் அதாவது 1989 இற்கு பிற்பட்ட காலங்களில் நான் தாயகத்தில் இல்லை.
அது அங்கு எவ்வாறு உணர்வுபூர்வமாக மக்களால் நினைவுகொள்ளப்பட்டது. ,நினைவுகொள்ளப்பட்டு வருகின்றது என்பதை நண்பர்கள் மூலமும்,செய்திகள் மூலமும் அறிந்த புலம்பெயர் பரம்பரையில் நானும் ஒருவன்.
தாயகத்திற்கு நிகராக, அதைவிட இன்னும் சிறப்பாக மாவீரர் நாள் நினைவுகள் புலம்பெயர்தேசத்தில் நினைவுகொள்ளப்பட்டு வருவதும் , இதுவரைகாலமும் அதில் பங்கெடுத்து, காவியநாயகர்களை நினைவுகூர்ந்த நான் இனிவரும் காலங்களிலும் ஒப்பற்ற அவ் வீரர்களை நினைவுகூர்வேன் என்பதும் உறுதி.
புலிகள் வேறல்ல, மக்கள் வேறல்ல.
மக்கள்தான் புலிகள் , புலிகள்தான் மக்கள்.
எம் வீரர்களை நினைவுகொள்வதும், பூஜிப்பது, பாதம் பணிவது எங்கள் உரிமை, எங்கள் விருப்பம்.
அதை தடுக்க எவனுக்கும் உரிமையில்லை.
தடுத்தாலும் அதை மீறி நினைவுகொள்ள எம்மக்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள் .
புலம்பெயர் தேசத்தவர்களை தாயகம் திரும்பிவந்து அரசியல் செய்யுங்கள் , மாவீரர் நினைவுகளை அனுஷ்டியுங்கள் என கூறி முடக்கநினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.
பாதுகாப்பாற்ற , உயிர்பயம் நிறைந்த சூழலில் மாவீர கண்மணிகளை பூஜிக்க தயாராகும் எம் தாயக உறவுகள் ,புலம்பெயர் உறவுகளை நன்கே புரிந்துவைத்திருக்கின்றார்கள்.
இந்த பரஸ்பரபுரிந்துணர்வு போதும் எமக்கு.
நாம் ஒன்றிணைந்து ,
வீரம் விதைத்த,
எம் ஈகைப்புதல்வர்களை வணங்கிடுவோம்.!!
அன்பரசன் நடராஜா.