கிருமித் தொற்றுக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு: கொடிகாமத்தில் சோகம்!

0
573

கிருமித் தொற்றுக் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கொடிகாமம், இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவராசா உஷா (வயது – 27) என்ற கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி வியாழக்கிழமை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கர்ப்பிணிப்பெண் நுரையீரலில் கிருமி தொற்றியதன் காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

எனினும் மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here