நெஞ்சில் குண்டேந்தி வீழ்ந்த இறுதிநொடியில் கூட ஒவ்வொரு மாவீரனும் தன் மக்களையும், நாளை மலரப்போகும் தன் தாயகத்தையுமே நினைத்திருப்பான்.
தன் கைதவறிய ஆயுதம் தன் தோழனின் கையில் தவழும் எனவும், அது எதிரியை நோக்கி நீளும் எனவும் தாயகக்கனவுடன் கண்ணை மூடியிருப்பான்.
உங்கள் கனவுகளையும், உங்கள் ஆயுதங்களையும் நாம் அங்கேயே விட்டுவிட்டோம்.
இன்று,
மெளனமாகி,
சாக்கடைப்புழுவாகி,
எதிரியின் காலடி தரிசித்து,
அடையாளமிழந்து,
அசிங்கமாக,
வாழ்கின்றோம்.
முடிந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள்.!!
-அன்பரசன் நடராஜா.