வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் நாகதம்பிரான் கோயில் வீதி கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம்(35) தேவி(30) என அடையாளம் காணப்பட்டுள்ளது. வயல் வாடியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலம் இருப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிசாரால் மீட்கப்பட்ட சடலங்கள் உடல் கூறாய்வு பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.