ஈழத்தமிழர்களாகிய நாம் எம் தோளுக்கு மிஞ்சிய ஒரு சுமையை சுமந்து கொண்டு மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது யதார்த்த புறநிலைகளை தாண்டி விட்டுக்கொடுப்பற்ற ஒரு விடுதலை அரசியலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
இன்று சிறிலாங்காவின் சனாதிபதியாக பதவியேற்கப்போகும் ஓர் பேரினப்படுகொலையாளியின் செய்தி எமது விடுதலையை விரைவுபடுத்த வேண்டிய தேவையை மிகமுக்கியமாக புலம்பெயர் தமிழர்களிடம் காலம் தந்துவிட்டிருக்கின்றது.
தாயகத்தில் இருக்கின்ற சிலர் கோத்தபாய எனும் இனப்படுகொலையாளிக்கு வாழ்த்து சொல்வதும் அறிவுரை சொல்வதும் நகைப்புக்கிடமாகவும் கோபமூட்டுவதாகவும் இருந்தாலும் காலம் இவர்களையும் கடந்து போகவே சொல்லும்.
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அவர்களிற்கான ஒரே இலக்கு தமிழீழ தேசம் என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லாமல் தொடர்வோம்.
“தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமல் இல்லை; அன்றியும் இந்த இலட்சியத்திற்கு எதிராக, எந்தெந்தச் சக்திகள் எப்படியெல்லாம் செயற்படும் என்பதும் எமக்கு தெரியாதது அல்ல. பிராந்திய வல்லரசின் ஆதிக்க அபிலாசைகளும், உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகைய தலையீடுகளை ஏற்படுத்தும் என்பதையும், நாம் எதிர்பாராமல் இருக்கவில்லை. இந்தச் சவால்கள்
எழுந்த போதெல்லாம் நாம் அதைத் துணிந்து எதிர்கொள்ளத் தவறவில்லை. அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும், நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை; ஆதிக்க சக்திகளின் ஆவேசப் புயல்களும் எம்மை ஆட்டங்காணச் செய்யவில்லை.”
.- தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள்.
நன்றி:தவபாலன் திருநிலவன்