தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :

இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோத்தபாய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும்.
சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவு மேலும் பெருகும்.2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்தபாய ராசபட்சேயும் முக்கிய பொறுப்பாவார்.
அவருடைய வெற்றி ஈழத்தமிழர்களுக்கு மேலும் மேலும் அழிவையும் நெருக்கடியையும் உருவாக்கும்.
என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.