கிளிநொச்சியில் இன்று (12) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையான இராசரத்தினம் சந்திரகுமார் (வயது 34) என்ற நபர், ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டுக்கு உந்துருளியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கெப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.