பங்களாதேஷில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் தொடருந்தும் டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் தொடருந்தும் மாண்டோபாக் தொடருந்து நிலைய வளாகத்தில் மோதிக்கொண்டன.
அதிகாலை நேரம் என்பதால் தொடருந்தில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் வௌியில் தப்பிச் செல்ல முடியாமல் 15 பேர் உயிரிழந்தனர்.
காயமுற்ற 50க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.