கிளிநொச்சி மலையாளபுரத்தில், 3 வயது சிறுவன் ஒருவன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன், இரவு உறங்குவதற்காக படுக்கை அறைக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்துக்கு பின்னர் வீட்டுக்குள் இருந்து, கண்டங்கருவளை இனத்தைச் சேர்ந்த பாம்பு வெளியேறியுள்ளது. அந்தப் பாம்பை, சிறுவனின் தந்தை அடித்துக் கொன்று விட்டார். அதன் பின்னர் எழுந்து வந்த சிறுவன், மீண்டும் உறங்குவதற்காகச் சென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், நேற்றுக் காலை சிறுவனை எழுப்பியபோது நினைவற்று இருந்ததாகவும் இதன்பின்னர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு சிறுவனை எடுத்துச் சென்றபோது அவர் பாம்பு தீண்டியதில், ஏற்கெனவே உயிரிழந்து விட்டார் என்றும் வைத் தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.