அயோத்தியில் இராமர் கோயில்: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0
472

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், 3 மாதத்துக்குள் இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து பேர் அமர்வு அளித்த தீர்ப்பில்,
“ 1934 ஆம் ஆண்டு கலவரங்கள் மற்றும் 1949 இல் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள் முற்றம் இருந்திருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் 1857 க்கு முன்னர், இந்துக்கள் உள் முற்றத்தில் வழிபடுவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஆவணங்கள் காட்டுகின்றன. 1857 ஆம் ஆண்டில் வெளி மற்றும் உள் முற்றத்தை பிரிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் ராமரின் பிறப்பிடம் மசூதியின் உள் முற்றத்தில் இருப்பதாக இந்துக்கள் எப்போதும் நம்பினர்.
ராம் சபுதாரா, கர்ப் கிர்ஜாவில் இந்துக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, சர்ச்சைக்குரிய சொத்தின் மீது முஸ்லிம்களுக்கு உடைமை உரிமையை நிறுவமுடியவில்லை.
சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்கள் சன்னி வக்ஃப் வாரியத்தால் உடைமைகளை நிறுவ முடியவில்லை. 1949 க்குப் பிறகு அந்த இடத்தில் நமாஸ் செய்யப்படவில்லை.
325 ஆண்டுகளாக, மசூதி கட்டப்பட்டதிலிருந்து 1857 வரை, இந்துக்களை விலக்கி சர்ச்சைக்குரிய கட்டமைப்பில் முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ததற்கான எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை . 1992 ல் மசூதியை தகர்த்தது சட்ட விரோதமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அனைத்து வகையான நம்பிக்கைகளும் அரசியலமைப்பிற்கு சமம்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து மதத்தினருக்கே கொடுக்கப்படுகிறது. அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம் அமைப்பினரிடம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறது.
இதன் மூலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதியாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நாட்டில் அமைதியை நிலைநாட்ட அனைத்து மாநில முதல்வர்களோடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.
தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அயோத்தியில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here