தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் முன்னெடுக்கப்படும் அரசியல் சந்திப்புகள்!

0
105

dcp287386868-4தமிழின அழிப்புக்கு நீதி கோரி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் பல நாடுகளில் பல்வேறு அரசியல் சந்திப்புகள்நடைபெற்றுகொண்டிருகின்றது . அவ்வகையில் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவையால் வெளிவிவகார அமைச்சில் முக்கிய சந்துப்பு நடைபெற்றது . இச் சந்திப்பில் இத்தாலி ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகளும் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் குழுவின் இணைப்பாளரும் கலந்துகொண்டனர் .

இச் சந்திப்பில் தமிழின அழிப்புக்கு பரிகார நீதி கிடைக்கும் வண்ணம் அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு இத்தாலி அரசு ஆதரவு வழங்க வேண்டும் என்பதையும் அத்தோடு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையை வெளிபடுத்தும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் தாயகத்திலும் புலத்திலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் மனுவும் கையளிக்கப்பட்டது .

சுவீடன் நாட்டில் தமிழர் பேரவையால் பாராளுமன்ற உறுப்பினருடன் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக சந்திப்பு நடைபெற்றது . இக் கலந்துரையாடலில் சுவீடன் நாடு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ உறுதிப்படுத்த வேண்டும் எனவும் , தமிழ் மக்களின் தாயகத்தில் இருந்து சிங்கள பேரினவாத அரசின் ராணுவங்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்பதையும் பிரதான கலந்துரையாடலாகவும் , மற்றும் சிறிலங்காவில் ஏற்பட்ட புதிய ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு எவ்வித முன்னேற்றங்களையும் கொண்டுவரவில்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது .

தொடர்ச்சியாக எதிர்வரும் 10/05/2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 16:00 மணிக்கு “PIAZZA TANNETUM TANETO DI GATTATICO (REGGIO EMILIA )என்ற இடத்தில் “21ம் நூற்றாண்டின் மறைக்கப்பட்ட இன அழிப்பு” என்ற தலைப்பில் ஈழத்தமிழ் மக்களுக்கு நடந்தது” இன அழிப்பு” தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதனை இத்தாலிய மக்களுக்கு வெளிக்கொண்டு வரும் முகமாக ,ஆறாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாளை “COMUNA DI GATTATICO” முன்னின்று நடாத்துகின்றது.

இந்நிகழ்வில் இன்றைய எமது தாயகத்தின் நிலையை ஜதார்த்தமாக எடுத்துக் கூறும் புகைப்படக்கண்காட்சியும் இடம்பெறுகின்றது. அனைத்து தமிழ் மக்களையும் இவ் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இத்தாலி ஈழத்தமிழா் மக்களவை அழைப்பு விடுகின்றது . இதே இடத்தில் ஐரோப்பிய புகைப்படக்கண்காட்சியும் சமகாலத்தில் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here