பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து வௌியேறும் விருப்பத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாரிஸ் காலநிலை உடன்படிக்கை சட்டத்திற்கு அமைய அந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கு ஒரு வருட கால அவகாசமுள்ளது.
பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்க உள்ளிட்ட 188 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதுடன், வெப்பநிலை அதிகரிப்பதைத் தடுப்பதே அதன் பிரதான இலக்காகும்.
எவ்வாறாயினும், இந்த உடன்படிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
எனினும், உடன்படிக்கையிலிருந்து விலகுவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த தீர்மானமானது, குறித்த உடன்படிக்கைக்கு இழைக்கப்பட்ட இழப்பு என சில ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.