நேபாளத்தில் பேருந்து விபத்து; பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

0
164

நேபாளத்தில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர். காணாமல் போனவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. நேபாள நாட்டின் டோலாகா மாவட்டத்தில் இருந்து தலை நகர் காத்மண்டுவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 70இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சிந்து பால்சவுக் மாவட்டத்தில் உள்ள மலைப் பாங்கான வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்து, வீதியில் இருந்து விலகி 165 அடி ஆழத்தில் உள்ள சன்கோஷி ஆற்றுக்குள் விழுந்தது.ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் பேருந்து நீரில் மூழ்கியது. விபத்து குறித்து தெரியவந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று, தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

3 மாத பச்சிளம் குழந்தையுடன் 6 சிறுவர்கள் உட்பட 20 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் 56 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. கடந்த மாதம் தலைநகர் காத்மண்டுவுக்கு அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியானதும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.                 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here