கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழில் பல்கலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன் கியூமன் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கியூமனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் மன்னாரில் நடந்தேறியுள்ளது.
இலங்கையின் கல்வித் தரத்தில் முன்னேறி வரும் மாவட்டமான மன்னார் மாவட்டத்திலிருந்து, பல கனவுகளோடு போட்டிகளின் மத்தியிலும் சவால்களிலும் கல்வி கற்று நான்கு வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள ஒரு மாணவின் இந்த விபரீத முடிவிற்கு யார் காரணம்?
ஒரு பயில்நிலை மருத்துவனாக வெளிவர சில மாதங்கள் உள்ள நேரத்தில் மாணவனின் விபரீத முடிவு அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக் கழக மருத்துவ பீட நிர்வாக சீர்கேட்டால் ஒவ்வொரு வருடமும் அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. கடந்த வருடமும் யாழ் பல்கலையின் மருத்துவ பீட இறுதியாண்டு வவுனியா மாணவன் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
பல்கலைக் கழக நிர்வாகங்கள் சமுதாயத்திற்கு நல்ல மாணாக்கர்களை உருவாக்கி சமூகத்திற்கு கொடுக்க வேண்டுமே தவிர வெளிப் பிரதேச மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடாத்தி அவர்கள் கோழைத்தமான முடிவெடுத்து உயிர்களை அழிக்கும் அளவிற்கு கட்டுப்பாடுகளையோ விதிமுறைகளையோ அழுத்தங்களையோ பிரயோகிப்பது தொடர்பில் மறு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
காதல் உள்ளிட்ட தீய பழக்கம் எதுவுமற்ற கியூமனின் இந்த முடிவு இறுதியாகட்டும். இனியாவது வேறு மாணவர்கள் எவரும் இவ்வாறான தவறான முடிவுகளை எடுக்காத நிலையை உருவாக்கி தடுக்க வேண்டிய பொறுப்பு பல்கலை நிர்வாகத்திற்கும் ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை உணர்ந்து செயற்படுவோம்.