
தமிழர்களைத் தீய சக்திகளாகச் சித்தரிக்கும் தபால் தலையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான சிங்கள அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
சிங்களவர்களின் பேய் ஓட்டும் சடங்குகளை நினைவூட்டும் இம் முத்திரையில் நெற்றியில் திருநீறும், குங்குமமும் அணிந்து வெற்றிலைகளை ஏந்திய தமிழர் ஒருவரின் ஓவியம் அரக்கர்களின் பாணியில் வரையப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தபால் தலையில் ‘தெமிழ சனிய’ (தமிழ்ச் சனியன்) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாசவை நிபந்தனையின்றி ஆதரிப்பதற்கு இரா.சம்பந்தரின் தலைமையிலான தமிழரசுக் கட்சி தீர்மானத்துள்ள நிலையில் இத் தபால் தலை வெளிவந்துள்ளமை ரணில்-சஜித் ஆகியோரின் தமிழின விரோதப் போக்கை வெளிப்படுத்துவதாகத் தமிழின உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி:சங்கதி24