யேர்மன் தலைநகர் பேர்லினில் இன்று திங்கள் முதல் புதன்கிழமை வரை தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக “எனது தாய் நாடு இல்லாமல் அல்ல ” எனும் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது .இக் கண்காட்சியில் தமிழின அழிப்பின் வடுவையும் வலியையும் எடுத்துரைக்கும் முகமாக இத்தாலி நாட்டின் பிரபல்யமான ஊடகவியாளர் திரு Stefano Stranges அவர்களால் தனது அண்மைய தமிழர் தாயகத்துக்கான பிரயாணத்தில் ஆவணம் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது .
தமிழின அழிப்புக்கு நீதி கோரும் முகமாக பேர்லின் நகரில் உள்ள பல்லின சமூக இணைவாக்க மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 18:00 மணிவரை இக் கண்காட்சி வேற்றின மக்களுக்காக வைக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை Braunschweig நகரில் உள்ள கலாச்சார மன்றத்தில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Berlin
Mehrgenarationshaus 48
Wassertor str 48
10999 Berlin
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி