பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்றுகொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் தொடருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடருந்தில் பயணித்தவர்கள் எரிவாயு சிலின்டரை எடுத்துவந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீ தொடருந்தின் 3 பெட்டிகளில் பரவியது. பலர் எரியும் தொடருந்தில் இருந்து தப்பிக்க வெளியே குதித்ததால் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.