மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் இன்று காலை பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து இன்று காலை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் சுஜித்தின் உடலுக்கு திருச்சி ஆட்சியர் சிவராசு, எம்.பி.ஜோதிமணி இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்நது சிறுவன் சுஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்களும் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இதையடுத்து சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதேசமயம், சுஜித்தின் மரணத்தித்றகு காரணமான ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது. மீட்பு பணிக்காக அருகில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது.