‘நினைவு கூர்வதற்கான உரிமை’ எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்றம்!

0
169

நினைவு கூர்வதற்கான உரிமை எனும் தலைப்பினிலான கருத்துப்பரிமாற்ற நிகழ்வொன்று சிவில் சமூக அமைய ஏற்பாட்டில் யாழ். பொதுசன நூலக கேட்போர் கூட மண்டபத்தில் இன்று நடைபெற்றிருந்தது. வைத்திய கலாநிதி. பூ.லக்ஸ்மன் (இதய சிகிச்சை நிபுணர்-யாழ் போதனா வைத்தியசாலை)தலைமையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக இறுதிப்போரில் உயிரிழந்த அனைவரிற்கும் மௌன வணக்கம் செலுத்தப்பட்டதுடன் பொது ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டிருந்தது.1-e1431286753569

நிகழ்வின் உரையாளர்களாக ருக்கி பெர்னான்டோ (மனித உரிமை செயற்பாட்டாளர்), பவானி பொன்சேகா (சட்டத்தரணி;சிரேஸ்ட ஆய்வாளார், மாற்றுக் கொளைக்களுக்கான நிலையம்), எழில் ராஜன் (வருகைதரு விரிவுரையாளார்- அரசியறிவியல் துறை- கிழக்கு பல்கலைக்கழகம், இணைப்பேச்சாளர்- தமிழ் சிவில் சமுக அமையம்) மற்றும் தமிழ் சிவில் சமுக அமையத்தின் இணைபேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் 3-e1431289736702ஆகியோர் ஆற்றியிருந்தனர்.

அங்கு உரையாற்றிய ருக்கி பெர்னான்டோ தமது அமைப்பில் இருந்து இறந்து போனவர்களுக்கு நினைவு தினம் அனுஸ்டிக்க ஜே.வி.பி முதல் ஈ.பி.டி.பி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், உள்ளிட்ட சகல கட்சிகளுக்கும் அனுமதி உண்டு. ஏன் படையினருக்கும் உண்டு. ஆனால் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர்களையும், போரில் மரணமடைந்த மக்களையும் நினைவுகூர அனுமதி இல்லை. இதன் மூலம் நினைவு கூரலில் கூட பாகுபாடுகள் காட்டப்படுகின்றதென தெரிவித்தார்.

உலகெங்கும் போர் நினைவு சின்னங்கள் உள்ளபோதும் இங்குள்ளது போன்று ஒரு இனத்தை, புலிகளை வென்றதற்கான வெற்றி சின்னங்கள் போல இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.உரிமை5

இறுதி யுத்தத்தின் இரத்த சாட்சியாக விளங்கும் வணபிதா அருளானந்தம் அன்ரன் ஸ்ரீபன் அடிகளார் தனது அனுபவங்களை கவிதையாக வழங்கியிருந்தார்.இவர் தனது வலிகளை கவிதைகளாகி அதை நூலாக வெளியிட்ட போது இவருக்கு சிறீலங்கா அரசாங்கத்தால் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.அத்துடன் பலாலிக்கு அழைக்கப்பட்டிருந்தஅவர் படையினரது விசாரணைகளையும் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நினைவு கூரல் என்பது எமது மைய இலக்கினை அடையும் போராட்டத்திற்கான உந்துசக்தியாக இருக்கும்.அதனாலேயே அரசு அதனை தடுக்க முற்படுகின்றது. அதே வேளை நினைவுகூரல் என்பது சமுதாயத்தில் இருந்து வேறுபட முடியாது. ஆனால் தமிழ் மக்களது கூட்டு நினைவு கூரல் நேரடியாக இலங்கை அரசாங்கத்தில் தாக்கம் செலுத்துவதால் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர் என குற்றஞ்சுமத்தியுள்ளார் யாழ். பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளரும் சிவில் சமூக அமைய இணைப்பேச்சாளருமான குமாரவடிவேல் குருபரன்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தனி நினைவு கூரலுக்கு பிரச்சினை இல்லை என்றும், கூட்டு நினைவு கூரலுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முந்நூற்றிற்கும் அதிகமான ஆர்வலர்கள் நிகழ்வினில் பங்கெடுத்திருந்தனர். பங்கெடுக்க வந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் நூலக நுழைவாயிலில் படம் பிடித்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.-e1431286454168

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here