ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவன் பக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், தங்களின் புதிய தலைவரை தெரிவு செய்துள்ளதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
லெபனான் நாட்டில் எழுந்த கிளர்ச்சியை அடுத்து சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வந்த தீவிரவாத குழு ஒன்று தங்களை புதிதாக ஐ.எஸ்.ஐ.எஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டது.Advertisement
இந்த அமைப்பின் தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் திகதி தன்னை பிரகடனம் செய்து கொண்ட அபுபக்கர் அல் பாக்தாதி,
தற்போது அமெரிக்க சிறப்பு அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தங்களின் புதிய தலைவராக ஹாஜி அப்துல்லா அல் – அப்ரி என அறியப்படும் அப்துல்லா கர்தாஷ் என்பவரை தெரிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம், தற்போது கொல்லப்பட்ட பாக்தாதியே இவரையும் தெரிவு செய்ததாக கூறப்படுகிறது.