85 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு; மீட்புக்குழுவினர் தீவிரம்!

0
313

85 அடி ஆழத்தில் இருந்த குழந்தை 100 அடி ஆழத்திற்கு குழந்தை சுர்ஜித் சென்று விட்டாதாக கூறப்படுகிறது. திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித்(2) மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். நேற்று மாலை 5.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுர்ஜித்(2) மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பயன்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை நவீன கருவிகள் மூலம் மீட்க மீட்புக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி, குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும். குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த இயந்திரத்தை நிலைநிறுத்தும் பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. புதிதாக தோண்டப்படும் குழியில், தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் இறங்கி குழந்தை சுர்ஜித்தை மீட்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here