சுவிஸ் நாட்டில் இன்று தமிழ்க் கல்விச்சேவையின் 21வது தமிழ்மொழிப்பொதுப் பரீட்சை:5297 மாணவர்கள் தேர்வை எழுதினர் !

0
205

சுவிசர்லாந்தில் 22 வருடங்களுக்குமேலாக நடுநிலமைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் கல்விச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவியரீதியில் இன்று (15.05.2015) ஐம்பத்தியெட்டு பரீட்சை நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது.

இந்த தமிழ்மொழிப்பரீட்சையில் ஆண்டு ஒன்று தொடக்கம் ஆண்டு பத்துவரை, ஐயாயிரத்து இருநூற்று தொண்ணூற்று எழு (5297) பரீட்சாத்திகள் தோற்றியுள்ளனர் .
தமிழ் வித்தியாலயங்களின் பொறுப்பாளர்கள் ஆசிரியர்கள் என பலநூறு மேற்ப்பார்வை யாளர்களுடன் -தமிழ் வித்தியாலயங்களில் ஆண்டு பத்துவரை கல்விகற்று நிறைவுசெய்து தற்போது உதவி ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர் .

அதிகளவு தமிழ்ச்சிறார்கள் தமது தாய்மொழியைக்கற்று பொதுப் பரீட்சைக்கு தோற்றியிருப்பதும் ,இளந்தலைமுறையினர் பரீட்சைப் பணிகளில் பங்கேற்றிருப்பதும் எதிர்காலச் சந்ததிக்கு தாய்மொழியை எடுத்துச்செல்லல் என்ற இலக்கினைநோக்கி கல்விச்சேவை உறுதியாகப் பயணிப்பதை புலப்படுத்துகின்றது .

21வது1-600x353 21வது2 21வது3 TESS1 TESS2 TESS-5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here