மலேசியாவில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி உணவு மறுப்புப் போராட்டம்!

0
714

மலேசிய நாட்டில் தமிழீழ விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்கு உதவியதாக கூறி பொய் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் தங்கள் உறவுகளை விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து கொட்டும்மழைக்கு மத்தியில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருள்களை வைத்திருந்தார்கள் என்றும் பண உதவி செய்துள்ளனர் என்றும் தெரிவித்து ஆசிரியர் உட்பட , மலேசியா மாநில அரசுத் தொடர்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உள்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ், இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட 12 பேர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here