கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக சட்ட
விரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாகப் பொது மக்களும் சூழலியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவும், இது மாவட்டத்தைப் பெரும் பாதிப்புக்கு இட்டுச் செல்லும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்
துள்ளனர்.
மாவட்டத்தின் பல இடங்களில் மேற்கொள்
ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.