ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிப்பதனை புறக்கணிப்போம் எனத் தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று (24) கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
978வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்தனர். மேலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரது படங்களைத் தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன், இரண்டு பிரதான வேட்பாளர்கள் மீதும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களான, போர்க்குற்றச்சாட்டு மற்றும் சிங்கள பௌத்த, ஒற்றையாட்சிக் கொள்கை போன்ற குற்றச்சாட்டுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் முன்வைக்கப்பட்டதுடன், குறித்த காரணங்களின் அடிப்படையில் இவ்விரு வேட்பாளர்களும் புறக்கணிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.