முல்லைத்தீவு மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வு நடவடிக்கை ஒத்திவைப்பு!

0
326

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20ம் திகதி அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுதந்திரபுரம், கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒரு பகுதியில் மண்ணெடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார்.இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் 20ம் திகதி அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் இன்று மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிசார், தடையவியல் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது நீதிபதியின் உத்தரவிற்கு அமைய 25ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here