மெக்சிகோவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சிலுவையில் தொங்கினார் பெண் வேட்பாளர் !

0
220

yjyh(1)மெக்சிகோவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பெண் வேட்பாளர் ஒருவர் சிலுவையில் தொங்கி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.   ரஃபேலா ஒரோஸ்கோ ரொமோ எனும் பெண் வேட்பாளர், மெக்சிகோவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

அவரது விண்ணப்பத்தில் செலவீனம் தொடர்பான தகவல்கள் இல்லை எனவும் போதிய ஆதரவுக் கையொப்பங்கள் இல்லை என்ற காரணத்தாலும் அவரை தேர்தலில் போட்டியிட மெக்சிகோவின் தேர்தல்கள் ஆணையகம் அனுமதிக்கவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தேர்தல்கள் ஆணையகம் முன்பாகரஃபேலா ஒரோஸ்கோ ரொமோ தன்னைத்தானே சிலுவையில் சேர்த்துக்கட்டி 2 மணித்தியாலங்கள் வரை சிலுவையில் தொங்கியுள்ளார்.   இவரது ஆதரவாளர்கள் சிலரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.   மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here