யாழில் நேற்று இரவு திடீரெனப் பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தின் காரணமாக வீடுகளில் உள்ள பல லட்சம் ரூபா பெறுமதியான மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளன.
கொழும்புத்துறை, அரியாலை, மணியந்தோட்டம் போன்ற பகுதகளிலேயே இந்தப் பாதிப்பு அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
தவணைக் கொடுப்பனவு முறையில் வாங்கிய விலையுயர்ந்த மின்சாதனங்களும் மின்குமிழ்கள், மின்இயந்திரம் போன்ற சாதனங்களும் பழுதடைந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
சில வீடுகளில் நிறுத்திவைக்கப்படடிருந்த மின்குமிழ்கள் ஒளிர்ந்ததாகவும், மின்ஆழிகளை அழுத்தியதும் மின்குமிழ்கள் மிகப்பிரகாசமாக ஒளிர்ந்து ஒலி எழுப்பி அணைந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மின்சார சபையின் அசமந்தப் போக்கே இந்த அனர்த்தத்திற்குக் காரணம் எனப் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளிலும் குறித்த சம்பவம் அடிக்கடி இடம்பெறுவதாகவும் இதுகுறித்து உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.