பாவன்குளத்தில் பாம்பு தீண்டி 5 வயதுச் சிறுவன் மரணம்!

0
480

பாவன்குளத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பத்தின் 5வயது சிறுவன் ஒருவன் குடிசையில் உறக்கத்திலிருந்த போது பாம்பு கடித்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

அரச உதவிகளுக்காக 5வருடங்களாக அலைந்து திரிந்த குடுபம், பல அரச உத்தியோகத்தர்களினால் இழுத்தடித்துக் கொண்டமையால் பாதுகாப்பில்லாத இடத்தில் குடிசை அமைத்து 3 பிள்ளைகளுடன் 3 வேளையும் உணவுக்காக நாட்கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்திய குடும்பம், போதியளவு உணவின்றி வறுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துக்ககரமான செய்தியறிந்த கிராமத்து இளைஞர்கள் சிறு உதவிசெய்து மரணச்சடங்கை ஏற்பாடு செய்துள்ளனர். அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தாமல் விட்டதனால் குழந்தைகள் பாதுகாப்பின்றி பலியாகின்றநிலை ஏற்பட்டுள்ளது.

இவர்களுடைய நிலைமையை புலம்பெயர் வாழ் தொண்டு அமைப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here