தமிழர் தாயகப் பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு!

0
261

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு – ஓட்டமாவடி – காவத்தமுனை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் குறித்த இளைஞர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி 21 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரத்து 894 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் இந்த மாதத்தில் 4 ஆயிரத்து 155 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மழையுடனான வானிலையால் நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்காரணமாக பொதுமக்கள், தமது சுற்றுசூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here