அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் போக்குவரத்து மிகுந்த சாலையில் சிறிய ரக விமானம் விழுந்த விபத்தில் விமானி உள்பட 4 பேர் பலியாகினர். பைப்பர் PA-32 என்ற ஒற்றை எஞ்சின் கொண்ட விமானம் சம்ப்ளி என்ற பகுதியில் உள்ள டெகால்ப் – பீச்ட்ரி விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது.
விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களில் போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில் விழுந்து சிதறியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்கள் மீது அந்த விமானம் விழவில்லை. விமானம் அதிவேகமாக சாலையை நோக்கி பாய்ந்த நேரத்தில் விமானி அலறியது போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் விமானி உள்பட 4 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.