வவுனியா – பம்பைமடு பெரியகட்டு பகுதியில் நேற்று (18) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உழவுஇயந்திர விபத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உழவு இயந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் உழவு இயந்திரம் பெரியகட்டு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதகுடன் மோதி குடைசாய்ந்தது.
இதன்போது கணவன் தூக்கிவீசப்பட்டதுடன், மனைவி உழவியந்திரத்தின் கீழ்பகுதியில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அவசர நோயாளர்காவுவண்டுயின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சிறு காயங்களுக்கு உள்ளான கணவன் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் பெரியகட்டு பகுதியை சேர்ந்த தனுசா (வயது 21) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.