படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19 10.2019) சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.

யாழ் பிரதான வீதியிலுள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து பிற்பகல் 03.30 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி நிகழ்வுகளும் நினைவுரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு நிமலராஜன் அவர்களின் பணிகுறித்தும் அவரது படுகொலை குறித்தும் நினைவுரையாற்றியிருந்தனர்.
2000ம் ஆண்டின் ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிமலராஜனின் படுகொலையுடன் பெருமெடுப்பில் ஆரம்பமான ஊடகப்படுகொலை 2009ம் ஆண்டின் யுத்த முடிவு வரையாக 41 தமிழ் ஊடகவியலாளர்களையும் ஊடகப்பணியாளர்களையும் இலங்கையில் காவு கொண்டிருந்தமை நினைவில் கொள்ளத் தக்கவை. யுத்தத்தின் பின்னரும் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஊடகவியலாளர்கள், ஊடக ஆதரவாளர்கள் பலரும் சிறிலங்கா பேரானவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தே தமது ஊடகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
–கந்தரதன்.