இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச ஊடகவியலாளர் பேரவை தெரிவித்துள்ளது. தென் ஆசிய நாடுகளில் அதிகளவில் அழுத்தங்களை எதிர்நோக்கும் ஊடகவியலாளர்களாக இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்களை அடையாளப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
ஏனெனில், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்படாத நிலமை இரு நாடுகளிலும் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் தண்டிக்கப்படாத நாடுகளின் வரிசையில் இலங்கை இந்தியா ஆகியன முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அதிகளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.