இன்று வெள்ளிக்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பல்வேறு தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. தவிர பல சேவைகள் தாமதமாக்கப்பட்டும் இயங்குகின்றன. குறிப்பாக இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்குள் RER B மற்றும் RER D சேவைகள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளன. SNCF ஊழியர்கள் ‘எதிர்பார்க்கப்படாத வேலை நிறுத்தத்தில்’ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்வேறு மாகாணங்களில் TER தொடருந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
CGT, SUD-Rail உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.