பிரான்சின் தலைநகரில் தமிழர்களின் வர்த்தக மையமான லாச்சப்பல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் உணவகமொன்றில் பிரெஞ்சு இனத்தவர் ஒருவர் தமிழர் தாயகத்தை நினைவுபடுத்தும் ஓவியங்களால் அலங்கரித்துள்ளார்.
இவரை எமது ஊடகப் பிரிவு தொடர்பு கொண்டு இதுபற்றி வினவியபோது, அவர் முதலில் கைகூப்பி தமிழில் வணக்கம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்தில் அதிக விருப்பம் கொண்ட இவர், பிரான்சில் துலுஸ் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.
60 வயதான இவர் தன்னுடைய பெயரையே ஓம்கார் தாண்டவன் என்று மாற்றி வைத்துள்ளார்.
தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் தமிழ் நாட்டிற்கும் பல தடவை சென்று வந்ததாகவும்
பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள், சுற்றுலாத் தலங்கள் அனைத்தையும் பல தடவை பார்வையிட்டுள்ளார்.
எமது தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் போராட்ட வரலாற்றினையும் நன்கு அறிந்து வைத்துள்ளார்.
இவர் எமது தாயகம் சார்ந்த ஓவியங்களை சேகரித்துவைத்தள்ளார்.
தான் சேகரித்து வைத்துள்ள தமிழீழ ஓவியப் படங்களை பிரதி செய்து லாச்சப்பலில் உள்ள உணவகம் ஒன்றில் அவர்களின் அனுமதியோடு அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
இது உணவகத்தை அழகுபடுத்துவதுடன், எமது தாயகத்தை நினைவுபடுத்துவதாகவும் அமைகின்றது.
காண்பவர்களையும் கவரக்கூடியதாக இச் செயல் அமைந்துள்ளது.
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”