பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்னால் கடந்த 23ஆம் திகதி நீதிமன்ற தடையுத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று முன்னிலையாகாத காரணத்தினாலே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வட்டினாபா சோமானந்த, முருந்தெட்டுவே ஆனந்த தேரோ, மெதகொட அபேதிஸ்ஸ தேரோ, இத்தேகந்தே சத்தாதிஸ் தேரோ, கலகொட அத்தே ஞானசார தேரோ ஆகிய தேரர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
நேற்றைய நீதிமன்றில் ஆஜரான இவர்கள் தனிநபர் பிணையில் விடு தலை செய்யப்பட்டுள்ளனர். என்றும் ஞானசாரதேரர் நீதிமன்றில் ஆஜராகி யிருக்கவில்லை. இதன் காரணமாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன் கலகொட ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.