மட்டக்களப்பில் மக்களை ஏமாற்றும் மோசடிக் கும்பல்!

0
465

மட்டக்களப்பு மாவட்டத்தில் கையடக்க தொலைபேசி ஊடாக மோசடி கும்பல் ஒன்று பலரிடம் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் வெளிநாட்டில் இருந்து பொதி வந்திருப்பதாகவும். அதிஷ்ட்ட சீட்டிழுப்பு வீழ்ந்துள்ளதாகவும் தெரிவித்து மோசடியாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடி வருகின்றனர்.

எனவே இந்த மோசடி கும்பலிடம் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக பலரின் கையடக்க தொலைபேசி ஊடாக தான் தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளர் என தெரிவித்து உங்களுக்கு தனியார் வங்கி ஒன்றில் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற கிளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அங்கு நேர்முக பரீட்டசைக்கு வரவேண்டியுள்ளதுடன் உங்களுக்கு வேலை நிச்சயம் அதற்கு மடிக்கணினி, மோட்டார்சைக்கிள், போன்றவை தரவேண்டியுள்ளது, எனவே  குறித்த திகதியில் வங்கியில் நேர்முகப்பரீட்சை அதற்காக உடன் 10 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம்வரை பணத்தை ஈ சி கேஸ் மூலம்  அனுப்புமாறு தெரிவித்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று குறித்த திகதியில் வங்கிக்கு சென்றால் அங்கு அப்படி ஒன்றும் இல்லை என அறிந்து ஏமாற்றப்பட்டுள்ளனர்

அவ்வாறே ஆயித்தியமலை பிரதேசத்தில் ஒரு குடும்ப பெண்ணிடம் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பொதி வந்திருப்பதாக தெரிவித்து அதனை வெளியில் கொண்டுவந்து தர பணம் அனுப்புமாறு ஒரு இலட்சம் ரூபா பணத்தை பெற்று பொதியும் இல்லை பணமும் இல்லாமல்  ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோன்று; வீடுவாடகைக்கு  விடுப்படும் என்ற பத்திரிகைகளில்   வந்த விளம்பர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அங்கு சென்று தாங்கள் தனியார்; வங்கி முகாமையாளர் அல்லது தனியார் பினாஸ்கம்பனி முகாமையாளர் என தெரிவித்து அந்த வீட்டின் நிலமைகளை கதை கொடுத்து அறிந்துவிட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பதாகவும் குறித்த திகதியில் வருவதாக தெரிவித்து அங்கிருந்து சென்று  பின்னர்.

ஓரிரு தினங்களில் எமது வங்கியில் வேலைவாய்ப்பு உள்ளது எனவே உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் உடன் அவர்களுடைய சுயவிபரக்கோவையுடன் ஒரு இலட்சம் ரூபா தரவேண்டும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் எமது வாடகை வீட்டிற்கு வரப்போகின்றவர்கள் என நம்பி பணத்துடன்  சான்றிதழ்களை கொடுத்து ஏமாந்துள்ளனர்.

இவ்வாறே மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது வெளிநாட்டில் உள்ளதாகவும்  மகனுக்கு மணமகள் தேவை மணமகளை உடன்  வெளிநாட்டிற்கு கூட்டி செல்வதாக  பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து அந்த வியம்பரத்துடன் தொடர்பு கொண்டு மணமகள் தொடர்பாக பேசிய பின்னர் எல்லாம் பொருத்தம் சரி உடன் கொழும்பு அல்லது  வேறு பிரதேசங்களக்கு வருமாறு மணமகளின் பெற்றோரிடம் தெரிவித்து அங்கு அவர்களிடம் எல்லாம் சரி விசா மற்றும் விமான சீட்டிற்கு பணம் தேவை என  தெரிவித்து அவர்களிம் 2 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை வசூலித்து ஏமாற்றிவருகின்றனர் . இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வோடு செயற்படவேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here