விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நிலையில் கட்டுப்பாட்டை இழந்த ரஷ்யாவின் விண்கலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை பூமி மீது எரிந்து விழவுள்ளது.
ஆளில்லாத சரக்கு விண்கலம் கசக்ஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. எனினும் அந்த விண்கலம் புறப்பட்ட விரைவிலேயே தொடர்பை இழந்தது. மூன்று தொன் பொருட்களை கொண்டிருக்கும் விண்கலம் பூமிக்குள் நுழையும்போது உடைந்து சிதறும்.
ஏதாவது ஒரு பொரும் பூமியை அடையும் பட்சத்தில் நிலத்தை விடவும் பெரும்பாலும் கடலிலேயே விழும் என்று நம்பப்படுகிறது.
பூமிக்கு மேலால் 420 கிலோமீற்றர் உயரத் தில் வலம்வரும் சர்வதேச விண்வெளி நிலை யத்தில் இருக்கும் ஆறு விண்வெளி வீரர்க ளுக்கும் உணவு, நீர், எரிபொருள், ஒட்சிசன் மற்றும் உடைகளை எடுத்துச் சென்ற விண் கலமே இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது.
விண்கலத்துடனான தொடர்பு இழந்ததை அடுத்து அது கட்டுப்பாட்டை மீறி இயங்க ஆரம்பித்தது. அது தொடக்கம் இந்த விண்கலம் பூமியின் சுழற்சி முறைக்கு அமைய படிப்படியாக இறங்க ஆரம்பித்தது. அது கிழக்கு அமெரிக்கா, கொலம்பியா, பிரேசில் மற்றும் இந்தோனே’pயாவுக்கு மேலாகவே படிப்படியாக இறங்கியது.
இந்த விண்கலம் மொஸ்கோ நேரப்படி வெள்ளிக்கிழமை (இன்று) 01:23க்கும் 11:55க்கும் இடைப்பட்ட காலத்தில் (இலங்கை நேரப்படி அதிகாலை 4:53- மதியம் 12:15) பயணத்தை முடித்துக் கொள்ளும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்துள்ளது. வளிமண்டலத்திலேயே வெடித்துச் சிதறும் இந்த விண்கலத்தின் சிறிய பாகங்களே பூமியை வந்தடையும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் குறித்த விண்கலம் எங்கு விழும் என்பது இதுவரை தெரியாதிருந்தபோதும் அது குடியிருப்பு பகுதியில் விழுவதற்கான சாத்தியம் குறைவாகவே இருப்பதாக ரஷ்ய விண்வெளி திட்டங்கள் குறித்த ஆய்வாளரான கத்லீன் லுவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
“நான் எப்போதும் நினைவ+ட்டும் ஒரு விடயம்தான் பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழ்ந்தது. எனவே யாரின் மீதாவது வந்து விழுவது மிக மிக அரிதானதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விண்கலத்தில் இருக்கும் குறித்த பொருட்கள் கிடைக்காதபோதும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ஆறு விண்வெளி வீரர்களுக்கும் ஜ{ன் 19 ஆம் திகதி அனுப்பப்படும் அடுத்த சரக்கு கலன் வரும்வரையான காலத்திற்கு போதுமான உணவு பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்திருக்கும் இந்த சரக்கு கலன் 50.7 மில்லியன் டொலர் பெறுமதியானது என்பது குறிப்பிடத்தக்கது.