கோடியக்கரை சீதாராமனின் இழப்புத் தாங்கமுடியாத பேரிழப்பாகும்!

0
431

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் ஆரம்பத்தோற்றம் முன்னர் கடல்புறா என்றே செயற்பட்டது.. இக்காலப்பகுதியில் ஓட்டியாக இருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் தியாகங்களைப் புரிந்தவர் கோடியக்கரை சீதாரமான். இவர் நேற்று 08.10.2019 சாவடைந்தார். இவருடைய இழப்புக்குறித்து கவிஞர் காசியானந்தன் ஐயா அவர்கள் தெரிவிக்கையில்,

தமிழீழத்தில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களும் நானும் ஒரே படகில் ஒரு நள்ளிரவில் கடல் வழியாக வந்து தமிழ்நாட்டில் ஒரு தடவை கரை தட்டிய போது கோடியக்கரை கடற்கரையில் எங்களை வரவேற்று தமிழ்நாட்டில் நாங்கள் தொடர்ந்து பயணம் கொள்ள வழிகாட்டியவர் சீதாரமான்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் தலைமையில் நடந்த தமிழீழ விடுதலை போராட்டதில் தமிழ்நாட்டில் அவருக்கு வலிமை மிக்க துணையாக இருந்தவர் கோடியக்கரை சீதாரமான்

உண்ணா நோன்பிருந்து தமிழீழ விடுதலைக்காக உயிர்நீத்த விடுதலை வீரன் தீலிபனின் பாசத்துக்குரியவராகச்‌ சீதாரமான் இருந்தார் . தமிழீழத்தில் சுதுமலையில் தீலிபனின்
இறுதி நிகழ்ச்சி நிடந்து கொண்டிருந்த போது கூட்டத்தில் சீதாரமானை பார்த்த நான் அதிர்ந்து போனேன் தீலிபனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற் க்காகவே கோடியக்கரையில் இருந்து படகில் கடல்தாண்டி வந்திருந்தார்

இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த பாரதத்தின் மாபெரும் தலைவர் இந்திரா காந்தி அம்மையார் புலிகளை ஆதரிக்க தொடங்கிய பின்பு – கோடியக்கரையில் உள்ள சீதாரமானின் வீடு தமிழ் ஈழத்தில் இருந்து வரும் விடுதலை புலிகள் தங்கி இயங்கும் ஒரு கடற்க்கரைத தளம் ஆயிற்று

தமிழ் நாட்டி இருந்த தன் வீட்டுக்கு “ குமரப்பா குடில் “ என்று தமிழீழ விடுதலை புலியின் பெயரை சூட்டியவர் சீதாரமான்

கள்ளம் கபடம் இல்லாதவர் , கலகலப்பானவர் , கனிந்த நெஞ்சம் கொண்டவர் கண்ணியம் மிக்கவர்

என் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அவ்ர் கொண்டிருந்த பாசம் எல்லையற்றது
தமிழீழத்துக்கு சீதாரமானின் இழப்பு தாங்கமுடியாத பேரிழப்பாகும்
இனிய நண்பர் சீதாரமானின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

– காசி ஆனந்தன்
சென்னை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here