மட்டக்களப்பு கடலில் காணாமல் போன மாணவன்: தேடும்பணி தொடர்கிறது!

0
453

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்பகுதியில் குளிப்பதற்காக சென்று காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை களுதாவளையைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்களுடன் இணைந்து கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளார்.

இவ்வாறு குளித்துக்கொண்டிருக்கும்போது அவர் கடலலையில் அள்ளுண்டுபோவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளனர்.

அதன்பின்னர் இந்த விடயம் தொடர்பாக அருகிலுள்ள சிறிலங்கா கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்த கடற்படையினர் இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் இதுவரையில் அவரை மீட்கவில்லை. இந்நிலையில் குறித்த இளைஞனை மீனவர்களும், கடற்படையினரும் தொடர்ந்தும் கடலில் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here