முள்ளியவளையில் 18 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!

0
710

முல்லைத்தீவு முள்ளியவளையில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 18 வயதுடைய யோகேஸ்வரன் கவிர்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

தந்தையை இழந்த குறித்த இளைஞர் தாயாருக்கு கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்மா என்னை மன்னித்து விடுங்கள். எனக்காக இனி நீங்கள் கஸ்ரப்படவேண்டாம்… என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு பரிசோதனையின் பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here