முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்கள நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் நேற்று கடுவெல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பசில் ராஜபக்சவுடன் நீதி மன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர். திவிநெகும திணைக்கள பணிப்பாளர் மற்றும் சாரதி ஆகியோரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப் பட்டுள்ளனர். சுகயீனம் காரணமாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க சுகயீனம் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.