விபூசிகா மீண்டும் சிறுவர் இல்லத்திற்கு!

0
108
vipoosika_jont_her_motherஎதிர்கால நலன் கருதி விபூசிகா மீண்டும் மகாதேவா சிறுவர் இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகளான விபூசிகாவையே மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று புதன்கிழமை அனுமதியளித்துள்ளார்.

பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் கோபி என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கைப்பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரது மகள் விபூசிகா நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் தாயுடன் சேர்ந்தார். அவர்கள் முன்னர் தங்கியிருந்த தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. அத்துடன், தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், இதனால் அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படி ஜெயக்குமாரி கோரியிருந்தார்.

இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விபூசிகா மீண்டும் மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கவைத்து கல்விகற்பதற்கு அனுமதியளித்துள்ளார். விபூசிகா சைவச்சிறுவர் இல்லத்திலிருந்து கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் தரம் 9 இல் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here