அம்பாறை மாவட்டத்தில் 2013 நடைபெற்ற தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ 13 கோடி ரூபாவை மோசடி செய்ததாக மக்கள் விடுதலை முன்னணி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இலஞ்ச ஆணையாளரிடம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2013 இல் தேசத்துக்கு மகுடம் திட்டத்தில் பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் முன்னாள் கோட்டாபய ராஜபக்ஷவினால் மூன்று திட்டத்திற்கு காசோலை வழங்கப்பட்டது. மகாஓயா பஸ் நிலைய அபிவிருத்திக்கு 30 மில்லியன், பதியத்தலாவை பஸ் நிலைய அபிவிருத்திக்கு 30 மில்லியன், தெஹியத்தக் கண்டிய பஸ் நிலையத்துக்கு 30 மில்லியன் என நகர அபிவிருத்தி திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சில் நிதி பெறப்பட்டுள்ளது.
ஆனால் இந்நிதியைப் பயன்படுத்தி அம்பாறையில் தனியார் காணி மீட்கப்பட்டுள்ளதுடன் முன்னாள் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், அம்பாறை நகர சபைத் தலைவர்களுக்கு அரச வதிவிடங்கள் அமைப்பதற்கு நிதி செலவிடப்பட்டுள்ளன.
அம்பாறை நகர சபைத் தலைவர், ஒப்பந்தக் காரர்களுக்கு இந்நிதி முறைகேடாக கையாளப்பட்டுள்ளதுடன் மிகுதி நிதியை தனிப்பட்டவர்கள் கையாண்டுள்ளனர். இந்நிதி மோசடியில் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்டுள் ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.