
கிளிநொச்சி – முரசு மோட்டை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் களஞ்சியம்படுத்தி வைத்திருந்த நெல்லை உட்கொள்ள வந்த யானையே 70 வயதுடைய அவரைத் தாக்கியுள்ளது.
அத்தோடு உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.