தாய்லாந்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் கல்லூரி மாணவர்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் தொழிற்முறை பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பயிற்சிகள் நிறைவடைந்ததை அடுத்து, தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) சிறப்பு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்பொருட்டு கல்லூரி மாணவர்கள் 15 பேரும், தொழிற்சாலை அதிகாரிகள் 3 பேரும் பேருந்தொன்றில் புறப்பட்டு சென்றனர்.
இதன்போது, அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
அத்துடன் தொழிற்சாலை அதிகாரிகள் உள்பட 5 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.