அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி யில் புதிய இராணுவ சோதனை சாவடி!

0
333

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தின் குழு ஒன்று பாரிய தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இன்று (30) மதியம் திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தினருக்கு இன்று  கிடைக்கப்பெற்ற தகவலொன்றை அடுத்தே கனரக வண்டி ஒன்றில் சுமார் 40 இற்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருது பகுதியில்  தேடுதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகள், மையவாடியை அண்டிய பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியால் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமையும்.

மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக  இராணுவத்தினரால் தொடர் தேடுதல்கள் நடவடிக்ககைள் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here