புன்னாலைக்கட்டுவன் தெற்கு ஈவினை சந்தியால் திங்கட்கிழமை (04) சென்று கொண்டிருந்த உந்துருளி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதா சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துருளி ஓட்டுனர், உந்துருளியை விட்டுக் குதித்தமையால் தீக்காயங்கள் இன்றித் தப்பியுள்ளார்.
நிகழ்வு ஒன்றுக்குச் சென்றுவிட்டு வந்தவரின் உந்துருளியின் எரிபொருள் தாங்கியில் தீப்பிடிக்கவே, அவர் உந்துருளியை தள்ளிவிட்டுத் பாய்ந்துள்ளார்.
இதில் சுமார் 2 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான உந்துருளி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.