தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் #திலீபன்வழியில்வருகின்றோம் நடை பவனியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று 26/09/2019 வியாழக்கிமை காலை 8.00 மணியளவில் நாவற்குழி சந்தியில் இருந்து ஆரம்பமாக உள்ளது.
திலீபன் அண்ணாவை நேசிக்கும் அவரின் உன்னத தியாகங்களை மதிக்கும் அனைவரையும் கட்சி பேதங்களை தாண்டி கலந்து கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகின்றோம்.
இந் நடைபவனி காலை 10 மணியளவில் நல்லூர் ஆலய சூழலை வந்தடையும்.
திலீபன் அண்ணா 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை தொடங்கினார். அதில் ஒன்று சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்த வேண்டும் என்பது. சிங்கள பௌத்த மயமாக்கலின் மற்றொரு வடிவத்தை நாம் முல்லை தீவில் கண்டோம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் அத்தனை தமிழ் உணர்வாளர்களும் இன்று ஒன்று கூடுவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
திலீபன் அண்ணா உண்ணா நோன்பு இருக்க சென்றபோது தனக்கு பின்னால் வரும் இளைஞர்கள் தனது கனவை நனவாக்க தொடர்ந்தும் போராடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆகும்.
நாம் இன்றைய நடைபயணத்தை நாவற்குளியில் தொடங்குவதும் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதை வெளிப்படுத்துவதற்குமாகும்.
எனவே அந்நம்பிக்கைக்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் இன்று காலை 8 மணிக்கு நாவற்குழியில் அணிதிரளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகின்றோம்.